கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 716 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. . அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 36 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 35 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 பேருக்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 பேருக்கும், தேனி மாவட்டத்தில் ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மற்றும் ஏர்போட் குவாரன்டைன் பகுதிகளில் தலா 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா இருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூடலூர், கன்னியாகுமரி, தென்காசி, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று செய்யப்பட்டுள்ளது. இன்றும் மட்டும் தமிழகத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 716 ஆக உள்ளது, எனவே ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் பொருளாதார உதவி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 அதிகரித்துள்ளது.






