செவிலியர்களின் சேவைக்கான விருதுகளும் பாராட்டுகளும் காத்துக் கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனை முதல்வர் நாராயண பாபு செவிலியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
செவிலியர்கள் அனைவரும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி அமைச்சர் செவிலியர்களின் சேவைக்கான விருதும், பாராட்டும் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இறுதியாக செவிலியர்களுடன் அமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.