மே 17க்கு பிறகு ஊரடங்கை தொடரலாம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மே 17 ஆம் தேதிக்குப் பிறகும் சில தளர்வுகள் உடன் ஊரடங்கு தொடரும் என பிரதமர் மோடியின் பேச்சில் இருந்து தெரிவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் போது கொரொனா  வைரஸ் நோயை கட்டுப்படுத்துவது மக்களின் இயல்பு வாழ்க்கையை படிப்படியாக அதிகரிப்பது என இரண்டு சவால் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் பரவாமல் தடுப்பது தற்போதைய தேவை என குறிப்பிட்ட பிரதமர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில முதலமைசர்களிடம் கேட்டுக்கொண்டார்.

 

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி அனைத்து சூழ்நிலைகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறினார்.


Leave a Reply