--- --:--:-- --

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அறிவித்தார் செங்கோட்டையன்!

4

தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி மொழி பாட தேர்வு, ஜூன் மூன்றாம் தேதி ஆங்கில தேர்வும் நடைபெறுகிறது. ஜூன் 5ம் தேதி கணித தேர்வு, ஜூன் 6ஆம் தேதி விருப்பம் மொழி பாட தேர்வும் நடைபெறுகிறது. ஜூன் எட்டாம் தேதி அறிவியல் தேர்வு, ஜூன் 10ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது. ஜூன் 12ம் தேதி தொழில் பிரிவு தேர்வு நடைபெறுகிறது .

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon