கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட திருப்பூர் !!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில் சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரில் சென்னையில் மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் 47 பேருக்கும்,செங்கல்பட்டில் 43 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அரியலூரில் 4,காஞ்சிபுரத்தில் 8,கிருஷ்ணகிரி 10 ,மதுரை 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்,பெரம்பலூரில் 9, ராணிப்பேட்டையில் 6 , தேனியில் 4 , நெல்லையில் 10 , வேலூரில் 3 , விழுப்புரத்தில் 6 , விருதுநகரில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலூர், கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,திருப்பத்தூரில் தலா ஒருவருக்கு என நேற்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் நேற்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருந்து வந்தது.சிகிச்சைக்கு பின்னர் 112 பேர் நேற்று வரை பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர்.மேலும்,கடந்த பல நாட்களாகவே திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை.

இதில் மீதமுள்ள 2 பேர் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் பூரண குணமடைந்து இன்று ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர்.மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய பணியால் இன்று திருப்பூர் மாவட்டம் கொரோனா தொற்று இல்லா மாவட்டமாக உருவாகி உள்ளது.


Leave a Reply