குளிர்ச்சியான இடம்தேடி வெளியேறும் பாம்புகள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் பாம்பு புகுந்து விட்டதாக வரும் அவசர உதவி அழைப்புகள் அதிகரித்திருப்பதாக வனச்சரக அலுவலகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வழக்கமாக கோடை காலங்களில் பாம்புகள் குளிர்ச்சியான மறைவிடங்களை தேடி வசிப்பிடங்களில் இருந்து வெளியேறுவது வழக்கம்.

 

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாம்பு புகுந்து விட்டதாக குடியிருப்புவாசிகளிடம் இருந்து தினந்தோறும் குறைந்தது ஆறு அழைப்புகள் வருகிறது. பயன்படுத்தாமல் போட்டு வைத்திருக்கும் செங்கல், மரக்கட்டைகள், டில்ஸ் குவியல்களில் ஒளித்துக் கொள்ள முயற்சிக்கும் என்பதால் கட்டுமான பணிகளுக்காக அத்தகைய பொருட்களை கையாளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

இதே போல இறை தேடி எலியை பிடிக்க பாம்புகள் வரக்கூடும் என்பதால் வீடுகளில் எலி தொல்லையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாம்புகளை பார்த்துவிட்டால் 0 4 4 2 2 2 0 0 3 3 5 என்ற எண்ணில் வனத்துறையினரை அழைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


Leave a Reply