இராமநாதபுரத்தில் ஏஐடியூசி சார்பாக மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதபோக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Publish by: மகேந்திரன் --- Photo :


அன்றாடம் உழைத்து , ஊதியம் ஈட்டி அதன்மூலம் குடும்பம் நடத்தும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும் , மளிகைப் பொருட்களும் தடையின்றி விரைவாக கொடுத்து முடிப்பதை உறுதிப்படுத்து. பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்ச் , ஏப்ரல் , மே மாதங்களில் தலா 7 , 500 வீதம் நிவாரணம் வழங்குக

 

கட்டுமானம் , ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி , பொருட்களை வழங்குக.அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்று காரணம் கூறி பதிவு செய்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவர்களுக்கு நிதி வழங்க மறுக்காதீர் ஓய்வூதியர்களுக்கும் நிவாரண நிதியும் பொருட்களும் வழங்கிடுக.

பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வுகளை நிறுத்துகிற , நிலுவை தொகைகளை மறுக்கிற நடவடிக்கையை ரத்து செய்க .அகோவிட் 19 கிருமித் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க , உயிரை பணயம் வைத்து பணி புரிந்த மருத்துவ பணியாளர்கள் , உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை நிரந்தர படுத்த வேண்டும்.

 

நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கு அந்த ஊதியத்தையும் குறைக்க அரசு நியமித்துள்ள குழுக்களை உடனடியாகக் கலைத்து இந்த பணியாளர்களுக்கு அரசு மரியாதை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் AITUC மாவட்ட பொறுப்பாளர் சண்முகராஜன்,CPI மாவட்ட செயலாளர் ,CPI நகரசெயலாளர் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் சங்கத்தின் தலைவர் ,துப்புரவு பணியாளர் சங்கத்தின் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Leave a Reply