3 வகையான மருந்துகளால் கொரோனா குணமாகுமா ?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவால் லேசாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மூன்று ஆண்ட்டி வைரஸ் மருந்துகளை சேர்த்து அளித்தபோது விரைவில் குணமடைந்ததாக ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஹாங்காங் பல்கலைக்கழக பேராசிரியர் குவாங்யுங் ஒருங்கிணைந்த இந்த ஆராய்ச்சியில் 127 கொரொனா நோயாளிகளுக்கு எய்ட்ஸ் மருந்தான லோபினாபிள் மஞ்சள் காமாலை மருந்தான ரிபாவைரின் மற்றும் தண்டுவட மரத்து போதலுக்கு இன்டர்பெரான் பீட்டா ஆகிய மூன்றும் கலந்து கொடுக்கப்பட்டது.

 

இந்த மருந்துகள் லாக்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. அதில் இந்த மூன்று மருந்துகளும் நோயாளியின் உடலில் உள்ள கொரொனா வைரஸ்களை செயலற்றதாக மாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மருந்துகளை வைத்து நடத்தப்படும் சிகிச்சையை விட 5 நாட்கள் முன்னதாகவே வைரஸ் உடலில் இருந்து காணாமல் போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Reply