நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவையில் தேச துரோக வழக்குப்பதிவு !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை ஆத்துப்பாலத்தில் சி.ஏ.ஏ எதிராக நடந்த போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குனியமுத்தூர் போலீஸார் தேச துரோக வழக்குப்பதிவு செய்தனர்.

 

மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி. ஆகிய திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி ஆத்துப்பாலம் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், மத்திய,மாநில அரசுகளையும், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி திருத்தங்களை விமர்சித்தும் பேசினார். இந்நிலையில் அடிப்படை ஆதாரம் இன்றியும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் குனியமுத்தூர் எஸ்.ஐ கொடுத்த புகார் அடிப்படையில் குனியமுத்தூர் போலீஸார் சீமான் மீது தேச துரோகம் மற்றும் வன்முறை தூண்டும் வகையில் பேசிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

 

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவையில் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply