மது விற்பனையில் மதுரை மண்டலம் முதலிடம் நேற்று ரூ. 122 கோடிக்கு வசூல் சாதனை

Publish by: மகேந்திரன் --- Photo :


கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் 43 நாள்கள் மூடப்பட்டிருந்து. இந்நிலையில் நேற்று முன்தினம் 3700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக்கை பொருத்தவரை தமிழகத்தை 5 மண்டலமாக பிரித்து மண்டல மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 

அதனடிப்படையில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.நேற்று முன் தினம் சென்னை நீங்கலாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ. 37 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.34 கோடியும் என மொத்தம் ரூ.170 கோடிக்கு மதுவிற்பனை ஆனது.

அதனைத்தொடர்ந்து நேற்று மட்டும் 122 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. சென்னை மண்டலம் – 9.28 கோடி, திருச்சி மண்டலம் – 31.17 கோடி, மதுரை மண்டலம் – 32.45 கோடி, கோவை மண்டலம் – 20.01 கோடி, சேலம் மண்டலம் – 29.09 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. இதில் நேற்றும் மதுரை மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது.


Leave a Reply