திரைப்படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திரைப்படத்துறையில் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை வரும் திங்கள் கிழமை முதல் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் சின்னத் திரைத் தயாரிப்பாளர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.

 

இந்த கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் படத்தொகுப்பு, குரல் பதிவு, கம்ப்யூட்டர் மற்றும் விஷ்வா கிராபிக்ஸ், பின்னணி இசை, ஒலிக்கலவை தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை வரும் திங்கட்கிழமை முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.


Leave a Reply