காசி மீது மேலும் இரு பெண்கள் புகார்…! அவனது கூட்டாளியும் சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காதல் ரோமியோ காசி 80க்கும் மேற்பட்ட பெண்களை முகநூல் மூலம் பழகி ஏமாற்றி பணம்பறித்த குற்றச்சாட்டின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவனை தற்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசியின் தந்தை தங்கபாண்டியன் தனது மகன் அப்பாவி என்று அவனை போலீசார் சுட்டுக் கொல்ல முயற்சிப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில் காசி மீது மேலும் இரு பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காசி என்ன மாதிரி எல்லாம் ஏமாற்றி பேசி மயக்கி தங்களை மிரட்டி பணம் பறித்தான் என்பதற்கு ஆதாரமான குரல் பதிவுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தன்னிடம் பெண்களை தாங்களாகவே வந்து பணத்தைக் கொடுத்து ஏமாந்து சென்றதாக கூட்டாளிகளிடம் காமுகன் காசி தெரிவித்துள்ளார். தான் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு உடம்பை வளர்த்து வைத்திருப்பதாகவும் பெண்களுக்காக அடுத்தவர்களின் சண்டையிட்டு ரத்தம் சிந்தினால் தனக்கு நஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் உள்ள பெண்களின் செல் நம்பரை தந்தால் அவர்களை வசியப்படுத்துவது உங்கள் திறமை என்றும் கூட்டாளிகளிடம் அவன் சவால் விட்டுள்ளார்.
எல்லாவற்றையும் விட தனக்கு எதிராக பல பெண்கள் புகார் அளிக்க தயாராகி வருவதை அறிந்த காசி தனது கூட்டாளிகளுடம் போட்டோ மற்றும் குரல் பதிவு எல்லாம் நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூட்டாளிகளை சமாதானப்படுத்தி உள்ளான். இதையடுத்து காசியில் பணப் பறிப்பு மோசடிக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளில் முக்கியமானவரான கல்லூரி மாணவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் காசியின் சேட்டைகள் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காசிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி குற்ற பிரிவு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மாதர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையே காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க விசாரணை நடந்து வருகிறது.






