சலூனில் தற்கொலை செய்துகொண்ட முடிதிருத்தும் கலைஞர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பொது முடக்கம் காரணமாக வறுமையில் வாடியதால் சென்னை தரமணியில் முடி திருத்தம் செய்யும் பணியாளர் தனது கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. தரமணி எம்ஜிஆர் சாலையில் பரணி என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார்.

 

பொது முடக்கம் காரணமாக சலூன் கடையை திறக்க முடியாததால் அவரது குடும்பம் வறுமை நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. கடை வாடகை, வீட்டு வாடகை, கடன் தவணை தொகையை செலுத்த முடியாமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பரணி பராமரிப்பு பணிக்காக கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு பரணியின் உறவினர்கள் சக தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Leave a Reply