--- --:--:-- --

இன்ஸ்டாவில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற குரூப்பில் பாலியல் வக்கிர பேச்சு!

9.1

டெல்லியில் பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இன்ஸ்டாகிராம் என்ற செயலியில் ஒரு குழுவைத் தொடங்கி அதில் பாலியல் வக்கிரங்களை கொண்டிருக்கிறார்கள். ரகசியம் அம்பலமானது. இளம் தலைமுறையினர் பரபரப்பாக இயங்கிவரும் சமூக வலைதளங்களில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். ஆனால் டெல்லியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

தெற்கு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்று குரூப் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அது மிகவும் ஆபாசமாக பேசத் தொடங்கிய அந்த மாணவர்கள் தங்கள் உடன் படிக்கும் மாணவிகளின் படங்களை மார்பிங் செய்து அதில் அவர்களது உடல் அமைப்பு குறித்து கமெண்ட்டுகளை பகிர்ந்துள்ளனர்.

 

ஒரு கட்டத்தில் மாணவிகளை எப்படி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது என்று ஆலோசித்து உள்ளனர். நண்பர்கள் மூலம் லாக்கர் ரூம் சாட்டிங் பற்றி கேள்வி பட்ட அதே பள்ளியில் படிக்கும் அவற்றை டிவிட்டரில் பகிர்ந்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் மற்றும் டெல்லி காவல் துறைக்கு கோரிக்கை விடுத்தார்.

இதனால் வாய்ஸ் லாக்கர் ரூம் விவகாரம் வைரலானது. இதனையடுத்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குரூப் அட்மின் ஆக இருந்த 15 வயது மாணவனை கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குருப்பில் உறுப்பினர்களாக இருந்த 57 மாணவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

இதனிடையே ட்விட்டரில் பாய்ஸ் லாக் ரூம் என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்ட மாணவர்கள் அனைவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் இன்டர்நெட்டில் அதிக நேரம் முடங்கி கிடக்கின்றன.

 

பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக ஆன்லைன் வன்முறை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்தது. தற்போது அதை உண்மையாக்கும் வகையில் விவரம் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி மகளிர் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க கோரி டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon