அமெரிக்க குழந்தைகளை வாட்டும் புதிய நோய்! அச்சத்தில் மக்கள்!
அமெரிக்காவில் கொரொனா வைரஸை தொடர்ந்து சிறு குழந்தைகளை மர்ம நோய் தாக்கி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2 முதல் 15 வயதிற்கு உட்பட்ட 15 குழந்தைகள் நியூயார்க் நகரில் அலர்ஜி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் காமசாகி என்ற நோய் அறிகுறியுடன் ஓத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, சொரி, வீங்கிய நிணநீர் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளில் நான்கு பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு புதிய தொற்று ஏற்பட்டு உள்ளதால் நியூயார்க் நகரில் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






