நாகையில் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 100 டாஸ்மாக் கடைகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்கும் இரண்டு கடைகளைத் தவிர 98 கடைகள் திறக்கப் படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில் விழுந்தமாவடி, பிரதமரமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக 6 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. பொதுமக்களோடு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் கடைகளைத் திறக்காமல் இருந்தனர்.


Leave a Reply