தெலங்கானாவில் மே 29ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு!
தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் மே 29-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பொது முடக்க உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மே மாதம் 17ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு சில தளர்வுகளையும் வழங்கியது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அங்கு பொது முடக்க உத்தரவை கூடுதலாக 10 நாட்கள் நீட்டித்து அந்த மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மாலை 6 மணிக்குப் பிறகு யாரும் வெளியில் நடமாட கூடாது என்றும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.






