--- --:--:-- --

செங்கல்பட்டில் கோயம்பேடு சந்தை மூலம் 12 பேருக்கு கொரோனா!

8

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேருக்கு கோயம்பேடு சந்தை மூலம் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 135 பேர் கொரொனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது தெரியவந்துள்ளது. மே மாதம் நான்காம் தேதி ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 527 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதில் 88 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட சென்னை கோயம்பேடு சந்தையே காரணம் என்று கூறப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு சென்று வந்த அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சென்னையில் இருந்து திரும்பிய நால்வர் உட்பட 5 பேருக்கு ஒரு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரும்பிய 503 பேர் செய்யாறில் உள்ள கல்லூரியில் தனிமைப்படுத்தப் பட்டனர்.

 

இவர்களில் 7 பேருக்கு ஏற்கனவே கொரொனா வைரஸ் பற்றி கண்டறிய ப்பட்டது. இந்நிலையில் கல்லூரியில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த மேலும் நான்கு பேருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

மேலும் தெல்லார் பகுதியிலுள்ள பெண்மணி ஒருவருக்கும் கொரொனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் 5 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon