இயக்குனர் பாரதிராஜா தேனியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்!
Director Bharathiraja at Salim Movie Audio Launch
சென்னையில் இருந்து தேனி சென்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். சென்னையிலிருந்த பாரதிராஜா 3 பேருடன் தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
தேனி மாவட்ட எல்லையான தேவதானப்பட்டியை அடைந்தபோது சென்னையில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு கொரொனா தொற்று உள்ளதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரொனா தொற்று பாரதிராஜாவுக்கு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
அவருடன் சென்றவர்களுக்கும் தொற்று இல்லை என உறுதியானது. இருப்பினும் சிவப்பு மண்டலமான சென்னையில் இருந்து வந்தவர் என்பதால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாரதிராஜாவின் தேனி வீட்டிலும் தனிமைப்படுத்த பட்டவர் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.






