ஆகஸ்ட் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை எப்போது திறக்கலாம் தேர்வுகளை எப்போது நடத்துவது என்று பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது.

 

அதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளை திறக்கலாம் என்று யுஜிசி மத்திய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை திறக்கலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

 

மேலும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.


Leave a Reply