சீனாவுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் டிரம்ப்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் விவகாரத்தில் பல உண்மைகளை சீனா மறைத்து விட்டதாக கூறி வரும் டிரம்ப் நிர்வாகம் அதற்கு தண்டனை வழங்கும் நோக்கில் சீனாவின் சர்வதேச வர்த்தகத்தை முடக்கும் அதி தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வரும் டிரம்ப் இனிமேல் சீனாவை நம்பாமல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளார். இதன் ஒரு கட்டமாகவே சீனாவின் வர்த்தக உறவுகளை துண்டித்து விட்டு வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய பொறுப்பை வகிக்கும் கிராஸ் தெரிவித்துள்ளார்.

 

சீன இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத வரியை பல மடங்கு உயர்த்த வசித்து வருவதாக கூறப்படுகிறது.


Leave a Reply