பூமியிலிருந்து நிலவை மிகத் தெளிவாக படம் பிடித்து இளைஞர் சாதனை!
பூமியிலிருந்து நிலவை மிக தெளிவாக படம் பிடித்து உள்ளார் அமெரிக்கர் ஒருவர். கலிபோர்னியாவை சேர்ந்த வானியல் புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவர் நிலவைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். இறுதியில் நிலவின் பக்கவாட்டு பகுதியை பலரும் புகைப்படம் எடுத்திருந்த நிலையில் அதன் மேல் புரத்தை படம் பிடிப்பதில் ஆண்ட்ரூ முயற்சி மேற்கொண்டார்.
1600 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட லென்ஸின் உதவியுடன் முழு நிலவையும் படம்பிடித்துள்ளார். அந்த படத்தில் நிலவில் உள்ள மேடு பள்ளங்கள், சமவெளிப் பகுதிகள் தெளிவாக தெரிகின்றன. இந்தப் படமே உலகிலேயே முதன்முதலில் பூமியில் இருந்து நிலவை மிகவும் தெளிவாக எடுத்த படம் என்று நாசா தெரிவித்துள்ளது.






