--- --:--:-- --

தனது 3 படங்களுக்கான சம்பளத்தில் தலா 25% குறைத்த விஜய் ஆண்டனி!

10

கொரொனா பரவலால் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையிலும் 3 திரைப்படங்களுக்கான ஊதியத்தில் 25 சதவீதத்தை விஜய் ஆண்டனி குறைத்துக் கொண்டுள்ளார்.

 

சிவாவின் தயாரிப்பில் தமிழரசன் படத்தில் நடித்து முடித்த நிலையில் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவின் தயாரிப்பில் அக்னி சிறகுகள் படத்திலும், இயக்குனர் செந்தில்குமார் ஓபன் தியேட்டர் மற்றும் இன்ஃபினிட்டி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் காக்கி என்ற படத்திலும் நடித்து வந்தார்.

 

படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என கருதி சம்பளத்தை குறைத்துள்ளார். இதை வரவேற்றுள்ள தயாரிப்பாளர் சிவா பிற நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon