டெல்லியில் டீசல் விலை மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் உயர்வு!
டெல்லியில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் அவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது. டீசல் மீதான மதிப்பு மதிப்புக்கூட்டு வரி 16.75 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 10 காசு விலை உயர்ந்து ஒரு லிட்டர் 62 ரூபாய் 29 காசிலிருந்து, 69 ரூபாய் 39 காசாக அதிகரிக்கும் என எரிபொருள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
அதேபோல பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 67 காசு விலை அதிகரித்து ஒரு லிட்டர் 69 ரூபாய் 59 காசில் இருந்து 71 ரூபாய் 26 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரிவசூல் பத்தில் ஒரு பங்கு அளவிற்கு இருந்ததால் பெட்ரோல், டீசல், மதுபானம் உள்ளிட்டவைகளின் மதிப்பு கூட்டு வரியை டெல்லி அரசு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.






