--- --:--:-- --

பச்சை மண்டலமாக மாறிய ஈரோடு!

10

தமிழகத்தில் கிருஷ்ணகிரியை தொடர்ந்து கொரொனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டமும் மாறியுள்ளது நம்பிக்கை அளித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தங்கியிருந்த தாய்லாந்து குடியுரிமை பெற்றவர்களிடம் முதன்முறையாக மார்ச் 16 ஆம் தேதி கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் 70 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில் பெருந்துறையை சேர்ந்த 60 வயது முதியவர் ஏப்ரல் 11ஆம் தேதி உயிரிழந்தார். மற்ற அனைவரும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவு பகலாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்ததன் பலனாக குணமடைந்து 5 கட்டங்களாக வீடு திரும்பினர்.

 

இதனையடுத்து இன்று வரை தொடர்ந்து 21 வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் ஈரோடு மாவட்டம் கொரொனா பாதிப்பு இல்லாத பசுமை மண்டலமாக மாறியதாக மாவட்ட எஸ்பி சக்தி கனேஷ் அறிவித்துள்ளார். எனினும் பொது முடக்கம் குறித்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon