காரமடை திமுக சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் 500 பேருக்கு நகர செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி காரமடையில் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோளின்படி நீலகிரி எம்.பி.ஆ.ராசா அறிவுறுத்தலின் பெயரில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர் .ராமச்சந்திரன், தலைமைச்செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம்,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் புருஷோத்தமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அஷ்ரப் அலி ஆகியோர் இந்நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.

 

காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 18 வது வார்டு அண்ணா நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பில் சுமார் 500 நபர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் காரமடை நகர திமுக சார்பில் நகர செயலாளர் வெங்கடேஷ் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் செந்தில் முருகன்,அப்துல் ரஹ்மான்,மாவட்டப் பிரதிநிதி அன்வர் பாஷா, வார்டு செயலாளர் செந்தில்குமார், அண்ணாநகர் முத்து, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply