முதன்முறையாக பக்தர்களின்றி நடந்த மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்! ஆன்லைனில் தரிசனம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரலாற்றில் முதன்முறையாக பக்தர்களே இல்லாமல் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவில் குடியேற்றம், வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

 

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சிக்கு மட்டும் பக்தர்கள் இன்றி சிவாச்சாரியர்களால் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வைபவத்தை ஆன்லைன் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

அதன்படி இன்று காலை சுவாமி சன்னிதியில் 4 சிவாச்சாரியர்கள் மட்டும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். இதனை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஆன்லைனில் தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்ததை தொடர்ந்து பெண்கள் தங்கள் தாலிக்கயிறை புதிதாக மாற்றிக் கொண்டனர்.


Leave a Reply