இன்று முதல் கட்டணம் வசூலிக்கும் அம்மா உணவகங்கள்… !

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. பொது முடக்கம் காரணமாக ஏழை, எளிய மக்கள் உணவுக்காக தவிப்பதை தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

 

ஏப்ரல் 22ம் தேதி முதல் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரும் 17ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 

ஆனால் பொது முடக்கம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.


Leave a Reply