சென்னையில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரோனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை ஆழ்வார்பேட்டையில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரொனா உறுதி ஆனதால் அவரை மீட்டு சிகிச்சைக்காக 4 போக்குவரத்து காவலர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் கடந்த 28ஆம் தேதி என்று இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கியதால் வலது பக்க கணுக்கால் முறிந்தது. அவரை அடையாறு போக்குவரத்து காவலர்கள் 4 பேர் மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அங்கு இளைஞருக்கு கொரொனா உறுதியானதால் நான்கு காவலர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


Leave a Reply