--- --:--:-- --

வீதியில் தியேட்டர்..பால்கனியில் அமர்ந்து படம் பார்க்கும் மக்கள்!

3

புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வாசிகள் தான் தங்கள் வீட்டு சுவற்றை திரையாக்கி மாலை நேரத்தில் திரைப்படங்களுடன் பொழுது போக்கி வருகின்றனர். கொரொனா பரவலைத் தடுக்க திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டு 45 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தினமும் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்து நொந்து போன நிலையில் 250 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன.

 

குடியிருப்புவாசிகள் மாலை நேரமானால் நடைபயிற்சிக்கு செல்வதாக சாலைக்கு செல்கிறார்கள். இதனை தடுத்து அவர்களை குடியிருப்பிலேயே இருக்க வைக்க குடியிருப்பு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து கங்காதரன் என்பவர் தினமும் அகன்ற திரையில் படங்களை திரையிட்டு வருகிறார். மேல் தளத்தில் வசித்து வரும் கங்காதரன் அவரது வீட்டிலிருந்து எதிர்புறம் உள்ள வீட்டின் சுவற்றில் திரையாக்கி ப்ரொஜெக்டர் மூலம் படங்கள் திரையிடப்படுகின்றன.

 

இதனை ஏராளமான குடியிருப்புவாசிகள் மொத்தமாக கூடாமல் அவரவர் வீட்டு பால்கனியில் இருந்தவாரே கண்டு களிக்கின்றனர். ஒரு பக்கம் உள்ள குடியிருப்பு வாசிகள் மட்டுமே திரைப்படங்களை கண்டுகளித்து இயலும் என்றாலும் இந்த முறையில் படம் பார்ப்பது மன அழுத்தத்தை போக்கும் வகையில் இருப்பதாகவும் மாலை நேரத்தை இனிமையாகவும் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

 

வீட்டுக்குள் இருந்து சிடி பிளேயர் மூலம் டிவியில் திரைப்படங்களை பார்த்த காலம் போய் வீட்டிற்குள் இருந்த படியே எதிர் வீட்டு சுவரை அகன்ற திரையில் அவரவர் வீட்டில் இருந்தபடியே படங்களை பார்க்கும் இந்த புதுமையான முறை பெரும்பாலான பகுதிகளில் நடைமுறைக்கு வந்தால் திரையரங்குகளுக்கு இனி வேலை இல்லாமல் போய்விடும்.

 

அதேநேரத்தில் சிடியை வாங்கினால் அதனை தங்கள் வீட்டில் போட்டு பார்ப்பதற்கு அனுமதி உள்ளது. அதனை இப்படி ஊருக்கே திரையிட்டு காட்ட வேண்டுமானால் அனுமதி பெற வேண்டும். இல்லையேல் அவர் சட்டத்தின்கீழ் ஜெயிலுக்கு செல்ல நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon