நாளை முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் எது?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருவாரூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் நாளை முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பலர் அதிகளவில் வெளியே வருவதால் தனிநபர் இடைவெளி என்பது கேள்விக்குறியானது. இதையடுத்து நாளை முழு முடக்கம் கடைபிடிக்கப்படும் என்று கடலூர், திருவாரூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். எனினும், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டும் செயல்படும் என்றும் அம்மா உணவகங்கள் திறந்து இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்காசி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மட்டும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply