இந்தியர்கள் இனி வாரத்திற்கு 60 மணி நேரம் உழைக்க வேண்டும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவால் முடங்கிப் போயுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியர்கள் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கு வாரத்திற்கு 60 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி யோசனை தெரிவித்துள்ளார்.

 

கொரொனாவால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நாராயணமூர்த்தி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் இன்னும் 12 முதல் 18 மாதங்கள் வரை கொரொனா தொற்றாமல் தடுக்க பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியர்கள் பணி புரிய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

குறிப்பாக நோய் தொற்று அதிகமாக பரவக்கூடிய வயது முதிர்ந்த பணியாளர்களுக்கு நிறுவனங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகவே வரும் காலங்களில் தொழிற்சாலைகளில் பணி செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு முக கவசம், கிருமிநாசினி, கையுறை போன்றவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நாராயணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply