பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன்..! வெளியான புகைப்படங்கள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வட கொரிய அதிபர் கிம் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வடகொரிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் பிறந்தநாள் விழா ஏப்ரல் 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதில் அதிபர் கிம் பங்கேற்கவில்லை.

 

முக்கியமான நிகழ்வில் கிங் பங்கேற்காதது அவரது உடல்நலம் குறித்த சந்தேகத்தை கிளப்பியது. புகைப்பிடித்தல் உடல் பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக இதய நோயினால் பாதிக்கப்படுவதாகவும் அவருக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல் வெளியானது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை மோசமடைந்து தாகவும் செய்திகள் பரவின.

எனினும் அண்டை நாடான தென் கொரியா இதனை மறுத்து வந்தது. இந்த நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

 

தலைநகர் பியாங்யாங் நகரில் உள்ள சன்ஸ்சோன் என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங்க் உன் அவரது சகோதரர்களுடன் கலந்து கொண்டுள்ளார். அவர் தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கும் புகைப்படங்களையும் வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


Leave a Reply