ரெம்டிசிவிர் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்கா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா நோயாளிகள் விரைந்து குணமடைய உதவும் ரெம்டிசிவிர் மருந்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. கிளியட்ஸ் சயின்சஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் மருந்தை கொரொனா நோயாளிகளுக்கு ஊசி மூலம் நரம்பு வழியாக செலுத்தி சோதனை செய்ததில் சராசரியாக 11 நாட்களில் குணமடைவதாக தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு இந்த மருந்திற்க்கு அவசர ஒப்புதல் வழங்கியுள்ளது. இயல்பாக ஒரு மருந்தை சோதனை செய்த நாளிலிருந்து 90 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹால் தெரிவித்துள்ளார்.

 

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தோர்க்கும் சுவாச கருவிகளின் உதவி தேவைப்படுவோருக்கு மட்டுமே ரெம்டிசிவிர் மருந்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளியட்ஸ் சயின்சஸ் நிறுவனம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு 10 நாள் சிகிச்சைக்கு தேவைப்படும் 15 லட்சம் டோஸ் மருந்தை அமெரிக்க அரசுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.


Leave a Reply