--- --:--:-- --

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை!

01

மிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்துப் பேசுகிறார். தமிழ்நாட்டில் தவெக அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் பொறுப்பு வகிக்கும் காவல்துறையின் மானியக் கோரிக்கை மீது கடந்த வியாழக்கிழமை விவாதம் தொடங்கியது.

 

 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர். உதயநிதி பேசும்போது குறுக்கிட்ட முதலமைச்சர் திங்களன்று விரிவாகப் பதில் அளிப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று பேரவை கூடியதும் தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்திருத்த முன்வடிவை முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்கிறார்.

 

 

தொடர்ந்து காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசவுள்ளார். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், முதலமைச்சரின் பதிலுக்காக எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி தமிழ்நாடே காத்திருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon