பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்…! திரையுலகம் அதிர்ச்சி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


பிரபல பழம்பெரும் பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் உடல் நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

 

மும்பையில் உள்ள ஹெச்.என்.ரிலையன்ஸ் மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ரிஷி கபூர் இறந்த தகவலை அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

 

 

பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரிஷிகபூர் 1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். ரிஷி கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹெல் ஹெல் மெயின், ஹபி ஹபி, கர்ஷ், அமர் அக்பர் அந்தோனி, ரபூ சக்கர், பனா, லவ் ஆஸ்கல், உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தின.

 

நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்டார். ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ளார்.


Leave a Reply