பெண்களை ஏமாற்றி ரோமியோ கட்டிய வீடு! இடிக்கப்படுகிறதா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ரோமியோ காசி என்கிற ரோமியோ பெண்களை முகநூல் மூலம் மயக்கி ஏராளமான பெண்களுடன் படம் எடுத்து அவற்றை காட்டி பிளாக்மெயில் செய்து நகையை பறித்து வந்ததாக புகார் எழுந்தது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரை தொடர்ந்து உள்ளூர் இளம்பெண் ஒருவரை ஏமாற்றி ஏராளமான நகை, பணம் பறித்த புகார் மீது பிளாக்மைல் ரோமியோ காசி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

காதல் களவாணி காசியின் வீட்டில் சோதனை செய்த போலீசார் மடிக் கணினி மற்றும் கணினி, ஹார்டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதில் இருந்து ஏராளமான பெண்களுடன் காசி இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவனது இந்த ப்ளாக் மெயில் சேட்டைக்கு நான்கு நண்பர்களும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

 

சம்பந்தப்பட்ட நண்பர்களிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்களில் இருவர் தங்களுக்கு தெரிந்த உண்மைகளை போலீசாருடன் விபரமாக தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் பெரிய இடத்துப் பெண் கள் வரை காசியின் வலையில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. திருட்டுப் பயலே சினிமா பாணியில் தன்னிடம் சிக்கிய வசதியான வீட்டுப் பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை மிரட்டி வருவதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே காசியை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநாத் காஞ்சிபுரத்தில் பொறுப்பு வகித்தபோது ரவுடியாக வலம் வந்த ஸ்ரீதர் தனபாலை ஊரை விட்டு விரட்டி அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நேரடியாக பிளாக்மைலர் காசியின் வழக்கை கண்காணித்து வருவதால் அடுத்தடுத்த நாட்களில் இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இது ஒருபுறமிருக்க பெண்களிடம் மிரட்டி வாங்கிய பணத்தில் தனது வீட்டை 4 தலங்களாக அடுக்குமாடி மாளிகையாக மாற்றியுள்ளார் காசி.

 

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முன்பகுதியில் நான்கடி ஆக்கிரமித்து கட்டியுள்ள அந்த வீட்டில் முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் அனுமதியின்றி இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது தலங்கள் சட்டவிரோதமாக கட்டியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விதிமீறிய கட்டுமானங்களை எடுக்க முடிவு செய்துள்ள நாகர்கோவில் மாநகராட்சி அது தொடர்பான அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றை ஓட்டிச்சென்று உள்ளது.

 

எப்படி அதிவேகமாக பெண்களை ஏமாற்றி சொத்துக்களை குவித்தானோ அதே வேகத்தில் அவன் வீடு இடிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் காசியில் வேலைக்கு உடந்தையாக இருந்த அனைத்து நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply