காரில் மதுவிற்ற தொலைக்காட்சி செய்தியாளர்கள் தலைமறைவு..! போலீசார் தேடுதல் வேட்டை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


காரில் மது விற்பனை செய்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 2 பேர் தலைமறைவாகி உள்னர்.

 

திருப்பூர் தனியார் தொலைக்காட்சியான 1yes என்ற தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருபவர்கள் பாரூக், நவ்சாத். இருவரும் தங்களது  தொலைக்காட்சியின் பெயர் பொடப்பட்ட காரில் காரில் மது விற்பனை செய்து வந்துள்ளனர்.

 

அவர்களிடம் மது பாட்டில்கள் வாங்கி விற்பனை செய்த மணிமுத்து, மணிகண்டன் என்ற இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தனியார் செய்தியாளர்களை தேடி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: குமரன் ரோடு, பார்க் ரோடு, ரயில் நிலையம் மற்றும் ஊத்துக்குளி ரோடு ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது ஓம்சக்தி காலனி கோயில் அருகில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

 

அவரை துரத்தி பிடித்ததில் சாக்குப்பையில் மதுபானங்கள் கள்ளத்தனமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றுவதும், ஊரடங்கு காரணமாக பணம் இல்லாததால் மதுபானத்தை வாங்கிவந்து விற்றிருப்பதும் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், பிரிட்ஜ்வே காலனியில் உள்ள மணிகண்டன் என்பவரிடம் 12000 கொடுத்து குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி வந்து 13300 ரூபாய்க்கு விற்றதும் தெரியவந்தது.

 

அவருக்கு உடந்தையாக இருந்த மணிமுத்து என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களான பாரூக், நவ்சாத் இருவரும் மதுபாட்டில்களை விற்று தந்தால் பணம் தருவதாக கூறியுள்ளனர்.
அவர்கள் சொன்னபடி, மணிமுத்துவும் 106 குவார்ட்டர் பாட்டில்களை தலா 200க்கு வாங்கி 250 வீதம் விற்று 25000 ரூபாய் லாபம் பார்த்துள்ளார். எஞ்சிய 6 பாட்டில்களை விற்க முயன்றபோது தான் போலீசிடம் அவர் சிக்கிக் கொண்டார்.

இதையடுத்து, அவருக்கு மதுபாட்டில்களை சப்ளை செய்த செய்தியாளர்கள் பாரூக், நவ்சாத் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

பொதுவாக ஊடகத்துறையில் தற்போது போலிகள் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகமாகி வருகிறது. அதுவும் திருப்பூர் போன்ற வர்த்தக நகரங்களில் புல்லுருவிகள் போல ஊடகத்துறைக்கு சம்பந்தம் இல்லாத போலிநபர்கள் பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் என்ற பெயரில் வலம் வருகின்றனர்.

 

இன்னும் ஒரு சிலரோ ஊடகத்துறையில் இருந்த கொண்டே சட்டத்துக்கு புறம்பான செயல்களில் இறங்கி மாட்டிக்கொள்கின்றனர். எனவே உண்மையான பத்திரிகையாளர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.


Leave a Reply