இந்தியாவுக்கு ஆபத்து…! ஐநா சொன்ன எச்சரிக்கை அறிவிப்பு இதுதான்…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


இந்தியாவில் உள்ள விளை நிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம் தாக்கக் கூடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஆப்ரிக்காவில் இருந்து வரும் இந்த வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகளுடன் இணைந்து இனப்பெருக்கம் செய்து, ஏமன், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக இந்தியா வரும் என்று ஐநா கூறி உள்ளது.

 

இந்த வெட்டுக்கிளிகள் பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விளை நிலங்களை கடுமையாக பாதிக்க ஆரம்பிக்கும். இந்திய உணவு உற்பத்தியில் மிக முக்கிய பங்காற்றும் பஞ்சாப் பாதிக்கப்படும்போது உணவுப் பஞ்சம் ஏற்படும்.

 

அதனால் இந்தியாவில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். நாள்தோறும் 35 ஆயிரம் பேருக்கான உணவு தானியங்களை வெட்டுக்கிளிகள் அழித்திடும் என்று ஐநா வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


Leave a Reply