கொரோனா யுத்தத்தில் இருந்து மீண்ட ஈரோடு மாவட்டம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்பு அதிகளவில் இருந்த ஈரோடு மாவட்டம் தற்போது கொரொனா பாதிப்பு வெகுவாக குறைந்து மாவட்டமாக மாறி வருகிறது. 70 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நான்காக குறைந்துள்ளது. தாய்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா விசா மூலம் அந்த ஆறு பேரில் ஒருவர் கோவையிலிருந்து தாய்லாந்து செல்ல முற்பட்ட போது அவருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

இதை தொடர்ந்து அவருடன் வந்து ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த 5 பேர், டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 42 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 70 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் மட்டுமல்லாமல் கவுந்தம்பாடி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை பகுதிகளில் 18 இடங்களில் தனிமைப்படுத்தி 33 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 800 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

 

இதனிடையே ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருந்துறையை சேர்ந்த 60 வயது முதியவர் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிகழ்வில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்து மக்களை நிம்மதி அடைய செய்யும் வகையில் 15ஆம் தேதி 13 பேரும், 17ஆம் தேதி 9 பேரும், 20ஆம் தேதி 10 பேரும் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

 

இரு தினங்களுக்கு முன்னர் 28 பேர் கொரொனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரொனா பார்த்தவர்களின் எண்ணிக்கை நான்காக குறைந்தது. இதனிடையே கொரொனா அறிகுறி தென்பட்ட ரத்த பரிசோதனை எடுக்கப்பட்ட 218 பேரின் முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் கொரொனா அற்ற மாவட்டமாக ஈரோடு விரைவில் மாறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் ஈரோடு மாவட்ட மக்கள்.


Leave a Reply