கல்லூரிகள் செப்டம்பர் மாதத்தில் துவக்கப்படும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்பு தொடர்வதால் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் வரும் ஜூலைக்கு பதிலாக செப்டம்பர் மாதம் முதல் இந்த கல்வி ஆண்டை தொடங்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கொரொனா மற்றும் பொது முடக்கத்தால் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய பல்கலைக்கழக மானியக் குழுவால் 2 சிறப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தது. அதில் ஒரு குழு வரும் கல்வி பருவத்தை ஜூலையில் தொடங்காமல் செப்டம்பர் மாதத்தில் தொடங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

 

இரண்டாவது குழு பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு மற்றும் வழிமுறைகள் இருந்தால் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என்றும், இல்லையெனில் முடக்க காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் கூறுகிறது. இந்த குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரும் வாரத்தில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply