கொரோனா வைரஸ் தொற்றுக்கு வவ்வால்கள் காரணமில்லை?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பரவ வவ்வால்கள் தான் காரணம் என்ற தவறான புரிதல் காரணமாக பல இடங்களில் அவை கொல்லப்படுவதாக குறித்து ஆராய்ந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இரண்டு இடங்களில் காணப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியதைச் சுட்டிக்காட்டி உள்ளவர்கள் இந்த வைரஸ் வவ்வால் தாக்குதலால் ஏற்படுபவை அல்ல என விளக்கம் அளித்துள்ளன.

 

6 தெற்காசிய நாடுகளை சேர்ந்த இந்த 64 ஆய்வாளர்களும் சுற்றுச்சூழலை அழித்து காட்டு விலங்குகளை உணவுக்குப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு காரணம் என சாடியுள்ளனர். ஆதிமூலம் எது என்பது எந்த அறிவியல் முடிவுகள் தராத நிலையில் வவ்வால்களை வேட்டையாடுவது தவறு என்றும் அதை காப்பாற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் அரசு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொரொனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் சோதனை தொடங்கப்பட்ட நிலையில் அந்த மருந்து கொரொனாவை ஒழித்துக்கட்டுவதில் புதிய நம்பிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஷாட் ஆக்ஸ் ஒன் என் சி‌ஓ‌வி 19 எனப்படும் அந்த மருந்தில் நோய் எதிர்ப்பு சக்தி நோய் மூலக்கூறுகளுடன் கொரொனா வைரஸை உடலின் மரபணு மூலக்கூறுகள் ஊடுருவசெய்யும் அதன் மேற்பரப்பு புரதமான கிளைகோ புரோட்டீன் மூலப் பொருட்களையும் சேர்த்து இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

இதன் மூலம் இந்த தடுப்பு மருந்து கொரொனாவுக்கு இணையாக மனித மரபணு கூறுகளில் நுழைந்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை இந்த மருந்து இருவருக்கு கொடுத்து சோதிக்கப்பட்ட நிலையில் இன்னும் சுமார் 800 பேருக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்தால் மருந்து தயாரிப்பை தொடங்க தயாராக இருப்பதாக ஆக்ஸ்போர்ட் உடன் கூட்டு சேர்ந்துள்ள இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply