பெள்ளாதி ஊராட்சியில் அ.தி.மு.க சார்பில் 2 ஆயிரம் பேருக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.கழக அமைப்புச்செயலாளர் ஏ.கே.செல்வராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெள்ளாதி ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ) கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான எம்.ஜி.ஆர் நகர்,வெண்மணி நகர், தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் ,ஒன்றிய செயலாளர் பி.டி. கந்தசாமி,ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன்,பெள்ளாதி ஊராட்சி மன்ற தலைவர் பூபதி (எ) குமரேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரத்தினம்,சுவாமிநாதன்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply