கெத்தாக ரோட்டில் சுற்றி திரிந்த இளைஞர்கள்…ஆம்புலன்சில் கொரொனா நோயாளியுடன் ஏற்றி தெறிக்கவிட்ட போலீஸ்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


முக கவசம் அணியாமல் வெளியே நடமாடுவோர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் நூதன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கொரொனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான பொது முடக்க காலத்தில் தேவையின்றி வெளியே செல்வதே முகக் கவசம் அணியாமல் நடமாடுவது போன்ற அலட்சியங்கள் பெரும்பாலான இடங்களில் அரங்கேறி வருகின்றன.

 

இவ்வாறு நடந்து கொள்வது எச்சரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருப்பூர் மாவட்ட காவல்துறை வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கவசமும், தலைக்கவசமும் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை காவல்துறையினர் நிறுத்துகின்றனர். கொரொனா பாதிக்கப்பட்டவர்களை போல சித்தரிக்கப்பட்டு இருப்பவர் இருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றனர். மெல்லிய நகைச்சுவையுடன் படமாக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Leave a Reply