ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தையும் குறை கூறுவது சரியல்ல

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டெல்லி மாநாட்டில் ஏற்பட்ட தொற்று பரவலுக்கு ஒரு குழு அல்லது ஒரு நபர் மட்டுமே பொறுப்பு என்றும் இதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தையும் குறை கூறுவது சரியல்ல எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லி நிகழ்வு குறித்து இஸ்லாமியர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

 

இதற்கிடையில் டெல்லி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா ஆசாத்தின் உத்திரப்பிரதேச பண்ணை வீட்டில் டெல்லி காவல்துறையினர் குவிந்துள்ளனர். தொற்று பரவலுக்கு காரணமானதாக தப்லீக் ஜமாஅத் தலைவர் மீது டெல்லி காவல்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சட்டவிரோத பணபரிமாற்றம் குற்றச்சாட்டு மத்திய அமலாக்கத் துறையின் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.


Leave a Reply