பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு அறிவித்தது ஹரியானா அரசு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா நேரத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றும் ஒவ்வொரு பத்திரிகையாளர்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்க முடிவு செய்திருப்பதாக ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரொனாவுக்கு எதிராக முன் களத்தில் நின்று போராடும் மருத்துவர்கள், காவல்துறையினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே போல் கொரொனா தொடர்பான தகவல்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பத்திரிக்கையாளர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

 

இந்நிலையில் அவர்களது குடும்பத்தினரை காப்பாற்றும் வகையில் ஹரியானா மாநில அரசு ஒவ்வொரு பத்திரிகையாளர்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு வழங்கும் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

கொரொனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கோவையில் இருந்து செயல்படும் இணையதளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இருந்து செயல்படும் இணையதள ஊடகமொன்று தமிழக அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர் கட்சி எம்எல்ஏ ஒருவரின் அறிக்கையை செய்தியாக வெளியிட்டதாக கூறப்படுகிறது.

 

அந்த செய்தி அரசுக்கு எதிரான தவறான செய்தி என்று கூறி கோவை மாநகராட்சி உதவி ஆணையர் சுந்தர்ராஜன், ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இணையதள உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம், அவதூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

 

முன்னதாக இந்த விவகாரத்தில் செய்தியாளர்கள் இருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர்களை நீண்ட நேரம் பிணைக்கைதிகளாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த செய்தியாளர்கள் ஏராளமானோர் காவல் நிலையம் முன்பு ஒன்று திரண்டதால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.


Leave a Reply