“Be The Real Man” சவாலுக்கு ரஜினிகாந்தை பரிந்துரைத்த சிரஞ்சீவி
பி த ரியல் மேன் சவாலுக்கு ரஜினிகாந்தை நடிகர் சிரஞ்சீவி பரிந்துரைத்துள்ளார். ஊரடங்கால் திரைப் படப் பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகர்கள் கடந்த சில நாட்களாக வீட்டில் மனைவிக்கு உதவி செய்வது போன்று பல்வேறு வேலைகளை செய்து இதுதொடர்பான வீடியோவை எடுத்து பி த ரியல் மேன் என ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வீட்டை சுத்தம் செய்வது தாய்க்கு தோசை சுட்டு கொடுப்பது போன்ற வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 492 பேர் கொரொனா வைரசால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. கொரொனா வைரஸ் தாக்கத்தால் பிரிட்டனில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 சதவீதம் பேர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். அதாவது 492 பேர் பிரிட்டனில் சிறுபான்மையினர் மத்தியில் தான் வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.






