ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து 15 பேர் வீடு திரும்பினர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரொனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். கொரொனானாவுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகள் உட்பட 15 பேர் குணம் அடைந்தனர். இதனையடுத்து அவர்களை மகிழ்ச்சியுடன் மருத்துவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

 

அப்போது குழந்தைகளுக்கு பொம்மைகளையும், பெரியவர்களுக்கு பழங்களும் வழங்கப்பட்டன. கொத்தவால்சாவடி, தண்டையார்பேட்டை, ராயபுரம், எண்ணூர், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள், இவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் முதல் வாரத்தில் கொரொனா உறுதி செய்யப்பட்டது.

 

இதேபோல ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த70 வயது மூதாட்டி உட்பட 5 பேர் தனிமைப்படுத்துதல் வசதி மையத்திற்கு அனுப்பப்பட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். செய்யூர் ,மதுராந்தகம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். அப்போது மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் 13 பேருக்கும் பழத் தட்டுகளை வழங்கி வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தார்.


Leave a Reply