மூன்று மனைவி இருக்கையில் 4 வது லவ்ஸ்…இறுதியில் கொலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சுந்தரேஸ்வரர்சாமி சாலை பகுதியை சேர்ந்தவர் பைனான்சியர் உதயகுமார். 38 வயதான உதயகுமாருக்கு 3 மனைவிகள் மற்றும் 6 குழந்தைகள் இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான அடிதடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சம்பவத்தன்று பட்டப்பகலில் உதயகுமார் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

 

அவரது சடலத்தை மீட்டு பிணக்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்த வேலூர் தெற்கு காவல்துறையினர் விசாரணையை முன்னெடுக்க உதயகுமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பல் வாகனத்தில் வெளியூர் செல்ல வழியில்லாததால் காவல்துறையினருக்கு போன் செய்து தாங்கள் சரணடைய விரும்புவதாக தெரிவித்தனர்.

 

இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் இமானுவேல், கட்டப்பா என்ற நவீன் குமார், அந்திரியாஸ், நிர்மல் ஆகியோரை பிடித்து விசாரித்தபோது பைனான்சியர் உதயகுமார் காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த உதயகுமாருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் உள்ள நிலையில் அவரது காதல் வலையில் நான்காவதாக கட்டப்பா என்கிற நவீன் குமாரின் உறவுக்கார பெண் ஒருவரும் விழுந்ததாக கூறப்படுகிறது.

 

அந்த பெண் உதயகுமார் மீது உயிரையே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணின் மனதை கெடுத்து விட்டதாக கடுமையான ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உதயகுமாரை தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்து வந்த அந்தப் பெண் இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்து வெளியேறி உதயகுமார் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

 

உதயாவின் மனைவிகள் அந்தப் பெண்ணுக்கு புத்தி சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இருந்தாலும் அந்தப் பெண் உதயா மீது தீராத காதலில் இருந்துள்ளார். இதையடுத்து தங்கள் வீட்டுப் பெண் ரவுடிக்கு நான்காவது மனைவி ஆகிவிடக்கூடாது என்ற ஆத்திரத்தில் குழந்தையை வெட்டிக் கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மண்ணாசை பெண்ணாசை இரண்டுமே எல்லை மீறிப் போனால் வாழ்க்கையை வீணாக்கி விடும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.


Leave a Reply