கனடாவில் போலீஸ் போல வேடமணிந்து துப்பாக்கிச்சூடு – 13 பேர் உயிரிழப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா என்ற பகுதியில் போலீஸ் அதிகாரி போல் வேடமிட்டு வந்த ஒரு பெண் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத் தள்ளி அதில் குறைந்தது. இதில்13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

காவல்துறை வாகனம் போன்ற ஒரு விலை உயர்ந்த காரை தயார் செய்து வந்த அவன் தரைத்தளத்தில் வீடுகளுக்குள் இருந்த மக்களை குறி வைத்து சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வீடுகளுக்கு தீ வைத்தான் என்றும் சொல்லப்படுகிறது. அவனை விரட்டி சென்ற போலீசார் என்ஃபீல்ட் எரிவாயு நிலையம் அருகே அவனை சுற்றிவளைத்தனர்.

 

பின்னர் அவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவன் பெயர் கேப்ரியல் என்றும் அவனுக்கு வயது 51 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய இதற்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் இது ஒரு முட்டாள்தனமான தாக்குதல் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.


Leave a Reply